கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Navoj in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்குடா பிரதேச மக்களினால் வாழைச்சேனை, கிண்ணையடி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதான வீதி, கிண்ணையடி சந்தியில் இன்று காலை கூடிய பிரதேச மக்கள் பதாதைகளை கையில் ஏந்தியவாறும், கோஷசங்களை எழுப்பியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மக்கள் ஒன்றியத்தினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே கிழக்கு மாகாணம் தமிழரின் கையில் இருந்து பறிபோகின்றது, தமிழர்களின் கோரிக்கையை கவனத்தில் எடு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை போராட்டகாரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

அத்துடன் தமக்கு பொருத்தமான கிழக்கு மாகாண ஆளுநரை நியமிக்குமாறும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இன்று இடம்பெற்ற ஹர்த்தாலினை முன்னிட்டு தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

அரச திணைக்களங்கள் திறக்கபட்ட போதிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான போக்குவரத்து சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

முஸ்லிம் பிரதேசங்களான கோறளை மேற்கு ஓட்டமாவடி, கோறளை மத்தி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் வழமைக்கு மாறாக திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்குகின்றன என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers