றிஷாட் பதியுதீனால் பள்ளிவாசல் திறந்து வைப்பு

Report Print Mubarak in சமூகம்

மீள்குடியேற்றத்தின் மற்றும் ஒரு மைல்கல் வர்த்தக கைதொழில் நீண்டகால இடம் பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பாரிய முன்னெடுப்பாள் பள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் உப்புக்குளம் கிராமத்தை சேர்ந்த 120 குடும்பங்களை தலைமன்னார் வீதி 2ம் கட்டை சைட் சிட்டி கிராமத்தில் மீள்குடியேற்றும் வரலாற்றில் முக்கியமான மீள்குடியேற்றத்தின் மற்றும் ஒரு நிகழ்வு இன்று வைபவ ரீதியாக நடைபெற்றுள்ளது.

முழுமையாக்கப்பட்ட வீட்டு வசதியுடன் பாதை, மின்சாரம், நீர் இணைப்பு, வடிகான் திட்டம், வீதி விளக்கு, அடிப்படை வசதிகள் என பரிபூரணமாக பூர்த்தி செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக தலைவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் அமைச்சரின் உயர் அதிகாரிகள், பிரத்தியோக செயளாலர் றிப்கான் பதியுதீன், வெளிநாட்டு தனவந்தர்கள், மன்னார் மாவட்ட அரச உயர் அதிகாரிகள், பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.