ஆட்கடத்தல் சம்பவம்: மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

சட்டவிரோதமாக மலேசியாவின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் ஆட்களை கடத்தும் திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடத்தல்காரர்கள் என்று அடையாளம் காணப்பட்ட மூன்று இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களால் படகு ஒன்றின் மூலமாக கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்படும் 34 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில், 24பேர் இலங்கையர்கள். 10 பேர் இந்தியர்கள் அடங்குவர்.

இந்த 34பேரில் 11 பெண்களும், 7 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக மலேசிய பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

Latest Offers