இருகுழுக்களுக்கிடையே மோதல்: 26 வயது பெண் மரணம்

Report Print Manju in சமூகம்

மாத்தறை திக்வெல்ல-கோட்டகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலவாங்கினால் குறித்த பெண் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers