இந்தியாவிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

Report Print Manju in சமூகம்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பொருட்களை கொண்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வசிக்கும் தாய், தந்தை, மகன், அவரின் மனைவி மற்றும் அவர்களின் இரு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 9ம் திகதி மாலை 6.00 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யு.எல். 128 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களின் பயணப் பொதிகளில் கொண்டு வரப்பட்ட 10 லட்சம் ருபாய் பெறுமதியான வாசனை திரவியம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட், விஸ்கி போத்தல்கள் என்பன சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அனைத்தும் அரச உடைமை ஆக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார்.