6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரண தண்டனை

Report Print Manju in சமூகம்

1999ம் ஆண்டு இரண்டு பாதாள கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 6 நபர்கள் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எந்த சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.ஜி பிரசன்ன பெரேரா மற்றும் சம்பத் பெர்னாண்டோ ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என பெயரிடப்பட்டிருந்த கமகே சந்தன குமார மற்றும் கருணதாச மஹதுர அஜித் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கத் தவறியமையால் நீதிபதி அவர்களை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பாதாள கும்பல்களுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்த மோதல் காரணமாக இந்த குற்றம் நடந்திருக்கிறது.

இந்த குற்றம் பற்றி கண்கண்ட சாட்சிகள் இல்லாமையினால், தடயங்கள் மூலம் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers