ஹட்டனில் வாகன விபத்து: இருவர் காயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - பொகவந்தலாவ, பிரதான வீதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளதுடன் இவ்விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.