வட மாகாண மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த ஆளுநர்!

Report Print Vethu Vethu in சமூகம்

வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 14ம் திகதி விடுமுறை வழங்குவதாக மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

தைப்பொங்கலை முன்னிட்டு இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும் இந்த விடுமுறைக்கு பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி தைப்பொங்கல் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.