கைபேசியை திருடியவர்கள் கையும் மெய்யுமாக மாட்டினர்: விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சம்பூர் பகுதியில் பெருமதியான அலைபேசியை திருடி வைத்திருந்த இருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(11) உத்தரவிட்டார்.

ஈச்சிலம்பற், உப்பூரல், கல்லடி பகுதியைச் சேர்ந்த 23, 36 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பெருமதியான அலைபேசியொன்றினை திருடி இருவரும் இணைந்து விற்பதற்கு வைத்திருந்த வேளையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏற்கனவே இவ்வாறு அலைபேசி திருடி குற்றச்சாட்டில் மூவர் விளக்கமறியலில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers