யானையின் தாக்குதலில் பலியான விவசாயி

Report Print Mubarak in சமூகம்

அனுராதபுரம் மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(11) அதிகாலை மஹயிலுப்பள்ளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 58 வயதுடைய இஹலகம மஹயிலுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சம்பவ தினத்தன்று தனது விவசாய நிலத்திலிருந்து வீட்டுக்கு சென்ற போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.