விட்டு கொடுக்காது இளைஞர் யுவதிகள் தொடர்ந்தும் போராட வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Report Print Murali Murali in சமூகம்

விட்டு கொடுக்காது தொடர்ந்து போராட தமிழ் இளைஞர், யுதவதிகள் முன்வர வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்றலை முன்நிறுத்தி டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் எதிர்வரும் 14ஆம் திகதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்த விழாவானது தமிழர்களுக்கான சில விடயங்களையும் தாங்கி நிற்கின்றது.

ஈழத்தில் மொழி, கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பதுடன் எமது நிலத்தையும் அபகரிப்பு செய்து கட்டமைக்கப்பட்ட ஒரு தொடர் இன அழிப்பு பலமுனைகளில் மேற்கொண்டு வருகின்றது.

எனவே, புலம் பெயர் மண்ணில் வாழும் நாம் எமது பண்பாட்டு அடையாளங்களை தக்க வைப்பதும் எதிர்கால சந்ததிக்கு கடத்துதலும் காலத்தின் தேவையாக காணப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த நிகழ்வை முன்னிட்டு சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சமய கோட்பாடுகளுக்கு அப்பால் உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களினால் கைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது. இயற்கையோடு ஒன்றிய விழாவாக அது அமைந்துள்ளது.

பொங்கல் விழாவை தமிழர்கள் ஒரு தேசிய விழாவாகவே முன்னெடுக்கின்றனர். சமயங்களை கடந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களும் பொங்கல் விழாவை சிறப்பிக்கின்றனர்.

இந்நிலையில், சமய நெறிமுறைகளுக்க அப்பால் தமிழர்களின் அனைவரினதும் பொது விழாவாக முன்னெடுக்கப்படுகின்ற இந்த தைப்பொங்கல் டெனீஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் டென்மார்க் நாடாளுமன்றில் பொங்கல் விழா கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்த நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகின்றேன். அத்துடன், விட்டு கொடுக்காது தொடர்ந்து போராட தமிழ் இளைஞர்கள் யுதவதிகள் முன்வர வேண்டும்” என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers