இலங்கை தமிழர்கள் இருவர் சிங்கபூரில் சிறையில் அடைப்பு!

Report Print Murali Murali in சமூகம்

சிங்கபூர் நாட்டில் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் இலங்கை தமிழர்கள் இருவருக்கு கடந்த 7ஆம் திகதி எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரராசசிங்கம் பூவிந்தன் மற்றும் மாரிமுத்து சுப்பிரமணியம் ஆகிய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒட்டோபர் 28ஆம் திகதி சிங்கபூர் சாங்கி விமான நிலையத்தில் வைத்து பரராசசிங்கம் பூவிந்தன் மற்றும் மாரிமுத்து சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பூவிந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் வருதற்கு பரராசசிங்கம் பூவிந்தனின் சொந்த கடவுச்சீட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், அவரின் கனடா நாட்டு கடவுச்சீட்டில் முரண்பாடுகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், மாரிமுத்து சுப்பிரமணியம் விமான நிலையத்தில் 3வது முனையத்தில் வைத்து ஐ.சி.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்கள் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இருவருக்கும் 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.