வவுனியாவில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா - செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயில்முட்டையிட்ட குளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய போதே குறித்த நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து 50 போத்தல்கள், வடிசாரய போத்தல்கள் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்ய பயன்படும் கோடா 180 லீட்டரும், நவீன உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers