வவுனியாவில் காணாமல்போன உறவுகளின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் காணாமல்போன உறவுகளின் குடும்பங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஆர். ஞானசேகரம் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 691 நாட்களாக வவுனியாவில் தொடர்ந்து சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் 50 குடும்பங்களுக்கு குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.