மட்டக்களப்பில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Report Print Navoj in சமூகம்

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் பல இடங்களில் வீட்டுத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் கிரான் பறங்கியாடு பகுதியிலும் 25 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்ஜித், வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உதவி முகாமையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers