வவுனியா கல்வியற்கல்லூரியில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, கல்வியற்கல்லூரியில் அமைதிக் கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரியில் நேற்று மாலை பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களால் கல்விபயிலும் மாணவர்களுக்கு அமைதி கல்வித்திட்டம் தொடர்பான பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அமைதி கல்வித்திட்டத்தின் இணைப்பாளர் பி.விமலநாதசர்மா, உளவளத்துணை ஆலோசகர் குகானந்தராஜா கீர்த்திகா மற்றும் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers