சிவில் பாதுகாப்பு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சக உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சிவில் பாதுகாப்பு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலுவின் வாசஸ்தலத்தில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும் மொரவெவ, மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்சலாகே முத்து பண்டா (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினரின் பிரித் வீடொன்றுக்கு சென்று முடிவடைந்த பின்னர் சக ஊழியருடன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரது வயலுக்கு சென்று தண்ணீரை திருப்பி விட்டு வர வேண்டியுள்ளதாகவும் , வாருங்கள் என கூறியதாகவும்,நம்பிக்கையின் பேரில் தான் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படை வீரர் ஏற்கனவே இரண்டு, மூன்று துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,மனிதாபிமான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers