இடமாற்றத்தால் மனமுடைந்த வங்கி ஊழியர் எடுத்த முடிவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

வங்கி இடமாற்றத்தினால் மனமுடைந்த அரச வங்கி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் திருகோணமலையைச் சேர்ந்த 29 வயதுடைய இலங்கை வங்கியில் கடமையாற்றிய ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது கணவர் மற்றும் உறவினர்கள், இலங்கை வங்கியில் கடமையாற்றி வந்த குறித்த பெண் தற்காலிகமாக மொரவெவ இலங்கை வங்கிக்கு இடமாற்றம் கிடைத்தமையினால் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கியதாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers