கை, கால் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

புத்தளம் – ஆனமடுவ, புனம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 66 வயதான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாய், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டவாறு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers