மட்டக்களப்பில் 70 வீதமான சிறுவர்கள் டெங்கு நோயால் பாதிப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 தினங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் 70 வீதமானவர்கள் 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, மாவட்ட பிராந்திய சுகாதார பணியகத்தின் டெங்கு பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் தர்சினி இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மற்றும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக டெங்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பாடசாலை மட்டத்தில் ஒத்துழைப்பு குறைவாக கிடைக்கின்றமை மற்றும் முறையான செயற்பாடுகளை மேற்கொள்ளாமை தொடர்பிலும் இதன் போது கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணியகத்தின் டெங்கு பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் தர்சினி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கிரிசுதன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்வி பணிமனை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் ஏனைய பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Latest Offers