பாதாள உலக குழு உறுப்பினரின் சகா கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

பாதாள குழு உறுப்பினர் இரத்மலானை அஞ்சுவின் கூட்டாளி ஒருவர் பிலியந்தலை சுவாரபொல வீர உதின மாவத்தை கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்மலானையை சேர்ந்த 25 வயதான சுமுது செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிள், செல்போன் என்பன சடலத்திற்கு அருகில் கிடந்துள்ளன. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இரத்மலானை அஞ்சு தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நபர் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

Latest Offers