லண்டனில் ஈழத்து பெண் தற்கொலைக்கு முயற்சி! கணவன் எடுத்த அதிரடி முடிவு

Report Print Murali Murali in சமூகம்

லண்டனில் வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று கடந்த வருட இறுதியில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த பெண் காப்பாற்றப்பட்ட நிலையில், வவுனியாவிற்கே அழைத்து வந்து அந்த பெண்ணின் கணவன் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை பூர்வீமாக கொண்ட லண்டன் இளைஞருக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.

எனினும், திருமணம் முடிந்த ஒரு மாதகாலத்திற்கு பின்னர் குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி நேரத்தில் கணவனின் குடும்பத்தினரால் அந்த பெண் காப்பாற்றப்படடுள்ளார்.

தற்கொலைக்கான காரணத்தை அந்த பெண்ணிடம் வினவிய போது, திருமணத்திற்கு முன்னர் இளைஞர் ஒருவரை காதலித்தாகவும், எனினும், பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து வைத்ததாவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணை வவுனியாவிற்கு அழைத்து வந்த அவரின் கணவர், நடந்ததை பெண்ணின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு அங்கேயே விட்டிட்டு லண்டன் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers