உப்புவெளியில் இருவர் கைது! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

Report Print Mubarak in சமூகம்

உப்புவெளி பிரதேசத்தில் நாற்பது மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த இருவர் கைது

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் நாற்பது மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த 50 மற்றும்52 வயதுடைய இருவரே இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஹேரொயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இருவரிடமும் இருபது மில்லி கிராம் வீதம் நாற்பது மில்லி கிராமை வைத்திருந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers