சுவாமி விவேகானந்தரின் 117ஆவது பிறந்ததினம் அனுஸ்டிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

சுவாமி விவேகானந்தரின் 117ஆவது பிறந்ததினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுவாமிக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தமிழருவி த. சிவகுமாரனால் விவேகானந்தர் தொடர்பான நினைவுரை நிகழ்த்தப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்நிகழ்வில் நகரசபை உப தலைவர் சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers