நடிகர் அஜித்துக்காக மோதிக் கொண்ட இலங்கை இளைஞர்கள்! வெளியானது காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

வவுனியாவில் திரையரங்கு ஒன்றில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியமை தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை பார்க்க சென்ற இளைஞர்களுக்கு இடையில் அடிதடி மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விஸ்வாசம் திரைப்படத்தின் முதலாவது காட்சி பார்க்க டிக்கட் பெற்றுக் கொள்ள சென்ற இடத்திலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இரண்டு தரப்பிற்கும் இடையிலான வாய்த்தகராறு மோதலாக மாறி ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Latest Offers