இலங்கை காட்டுக்குள் உல்லாசத்தில் பெருமளவு வெளிநாட்டவர்கள்! ஒருவர் பரிதாபமாக மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

அம்பலந்தோட்டை உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சுற்றுலா முகாமில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

சுற்றுலா அமைச்சின் அனுசரனையுடன் இடம்பெறும் இந்த முகாமில் உயிரிழந்தவர் இந்தியர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நேற்று காலை திடீரென கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியுடன் அம்பலந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதிகளவில் மதுபானம் அருந்தியமையே இந்த மரணத்திற்கான காரணமாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.