கிண்ணியாவில் மாடுகள் இறப்பதால் பால் உற்பத்தி பாதிப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் இறந்து வருகின்றமையால் பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கிண்ணியா பிரதேசத்தில் மாடுகள் அதிகளவில் இறந்து வரும் நிலையை தொடர்ந்து அப்பிரதேசத்தின் பால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

அதிகளவில் பால் சேகரிக்கப்படும் இடங்களில் ஒன்றான சூரங்கல் பால் சேகரிப்பு நிலையத்தில் சுமார் 600 லீட்டர் வரையான பால் மாத்திரமே சேகரிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த பால் சேகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் சுமார் 6000 முதல் 8000 லீட்டர் வரையில் பால் சேகரிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers