களுதாவளை மகா வித்தியாலயத்தில் 177 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு, பட்டிருப்பு - களுதாவளை மகா வித்தியாலயத்தில் இருந்து 177 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தில் இருந்து 177 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் விஞ்ஞானத் துறையில் 04 மாணவர்களும், வர்த்தக துறையில் 17 மாணவர்களும், கலைத்துறையில் 60 மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்பத்தில் 48 மாணவர்களும், உயிர்முறைமைத் தொழில்நுட்பத்தில் 48 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தினை அனுப்புவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் விஞ்ஞான துறையில் 04 பேரும், வர்த்தக துறையில் 07 பேரும், கலைத்துறையில் 20 பேரும், தொழில்நுட்ப துறையில் 29 பேரும் பல்கலைக்கழக அனுமதியினைப் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாணவர்களுக்கு கற்பித்த, ஊக்குவித்த அதிபர், ஆசிரியர்களுக்கு களுதாவளை பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மற்றும் களுதாவளை கல்வி சமூகம் என்பன தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.