வறுமையால் சிரமப்பட்ட மாணவிக்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்த முயற்சி

Report Print Rusath in சமூகம்

குடும்ப வறுமை காரணமாக பாடசாலை செல்வதற்கு மிகவும் சிரமப்பட்ட மட்டக்களப்பு - கரவெட்டி பகுதியை சேர்ந்த நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் தலைமையில் துவிச்சக்கரவண்டி இன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த குறித்த மாணவி தன்னுடைய கல்வி தேவை குறித்து முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாணவிக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக மாணவியின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் ஆர்.தியாகரெத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த மாணவியின் தந்தை இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொழில் செய்யமுடியாத நிலையிலும் உள்ளார்.

தாயாரும் நோய்வாய்ப்பட்டவராக உள்ளதனால் குறித்த மாணவி கரவெட்டியிலிருந்து நாவற்காடு நாமகள் வித்தியாலயத்துக்கு போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையிலுள்ளார் எனவும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

Latest Offers