ஐக்கிய தேசிய கட்சியில் இணையப் போகும் மஹிந்தவின் நெருங்கிய விசுவாசிகள்

Report Print Kamel Kamel in சமூகம்

மலர்மொட்டு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளை சேர்ந்த யாரும் எதிர்பாராத தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வர் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

யப்பஹூவ பகுதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எதிர்வரும் எந்தவொரு தேசிய தேர்தலின் போது நான் சொல்வது நிரூபணமாகும்.

ஜனாதிபதி, தற்காலிக பிரதமர் ஆகியோர் நமக்கு எதிராக செயற்பட்ட போது, எமது உறுப்பினர்களை பல கோடி ரூபாய்களுக்கு விலை பேசிய போது அந்த அனைத்து சவால்களையும் எதிர்நோக்கி கட்சியையும் அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்தது.

அந்த ஆளுமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே காணப்படுகின்றது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

50 நாள் அரசாங்கத்தின் போது ராஜபக்சக்களின் செயற்பாடுகளை தெளிவாக பார்க்க முடிந்தது என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.