கத்தோலிக்க தேவாலயங்களில் தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நாளைய தினம் பொங்கல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தினமான நாளைய தினம் காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்போது, விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.