யாழில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - கற்போவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன் எனும் 22 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரை தாக்கியவர் திருமணமானவரெனவும் , சம்பவத்தின் பின் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் மனைவி ,மகன்,மாமியார் ஆகியோரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபரின் கடவுச்சீட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதிலும் அவர் தலை மன்னார் வழியாக தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.