இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய, ஜேர்மன் நாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான ஜேர்மன் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாத்தறை மடிஹ பிரதேசத்தில் விளையாடி கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தர் 36 வயதான பிரித்தானிய நாட்டவர் என குறிப்பிட்படுகின்றது.
சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.