அலரி மாளிகையில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள்

Report Print Thiru in சமூகம்

அலரி மாளிகையில் நேற்றைய தினம் மாலை தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வினை பிரமர் அலுவலகமும், தேசிய நல்லிணக்கம், அரச கருமமொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடத்தியிருந்தன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இதன்போது பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் சமய மத குருவானவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அமைச்சர் மனோகணேசன், முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.