தமிழர்கள் வாழும் பகுதிகளில் களை கட்டிய தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்!

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மட்பாண்ட உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடந்த வருடத்தினைவிட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டஙங்களில் தைப் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

உழவர் திருநாளாகிய தைப்பொங்கல் நாளை நடைபெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தைப்பொங்கலுக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.


மலையகம்

உலகமெங்கும் வாழும் இந்துக்கள்நாளைய தினம் மலர உள்ள உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் இன்று ஆயத்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும், அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு பெருந்திரளான மக்கள் குழுமி இருக்கின்றனர்.

சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்துள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் மலர உள்ள தைதிருநாளினை முன்னிட்டு இந்துக்களின் வீடுகள் சுத்தம் செய்து அலங்கரித்து வருகின்றனர்.

மேலதிக தகவல்கள் யது, திருமாள்

கொழும்பு
கொழும்பில் நாளைய தினம் தை திருநாளை வெகு விமர்சையாக கொண்டாட மக்கள் ஆயத்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் பொங்கல் பொங்குவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்புகள் நிறைந்து காணப்பட்டுவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.


மேலும் வீடுகள் மட்டுமன்றி கோவில்களும் பொங்கல் தினத்திற்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது.