கிளிநொச்சி மக்களிற்கு உதவிக்கரம் நீட்டிய கொழும்பு முஸ்லீம்கள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்படைந்த கண்டாவளை, கல்லாறு மக்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராம மக்களுக்கு இன்று காலை பேருவளை சீனன் கோட்டை பகுதியை சேர்ந்தவர்களால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன் கோட்டை பள்ளிச்சங்கத்தின் அனுசரணையுடன், மக்களின் பங்களிப்புடன் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பொருட்களை சீனன் கோட்டைபள்ளிச் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.எம்.சிஹாப் ஹாஜியார், உறுப்பினர் ஏ.இஸட்.எம்.ஸவா ஹிர் தலைமையிலான குழுவினர் வழங்கி வைத்துள்ளனர்.

இதில் கண்டாவளை உதவிப் பிரதேச செயலாளர், கிராம அலுவலகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.