வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா, மடுக்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணியிலிருந்து வெடிபொருட்க்களை பூவரசங்குளம் பொலிஸார் இன்றைய தினம் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.

பண்படுத்தப்பட்ட குறித்த காணிக்கு சிறுவன் ஒருவன் விளையாட சென்ற நிலையில் உரப்பொதியில் சுற்றிவைக்கபட்டு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து தனது தந்தைக்கு தெரியபடுத்தியுள்ளான்.

பின்னர் குறித்த விடையம் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தெரியபடுத்தப்பட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரப்பொதியை சோதனை செய்து பார்த்தபோது மூன்று கைக்குண்டுகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தபடும் ரவைகள், கோல்சர் என்பவற்றை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இக் கிராமத்தில் இருந்து அண்மையிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers