இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட பல இலட்சங்கள் பெறுமதியான பொதிகள்

Report Print Ashik in சமூகம்

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான கடல் அட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை குறித்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினர் மன்னார் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பயணத்தின் போது இந்த கடல் அட்டைகளை மீட்டுள்ளனர்.

சுமார் 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கடலட்டைகள் 302 கிலோகிராம் எடை கொண்டது என தெரியவருகின்றது.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதோடு, கடல் அட்டைகளுடன் டிங்கி படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் என்பன கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.