பௌத்த தேரர்கள் பயணித்த வாகனம் முல்லைத்தீவில் விபத்து

Report Print Mohan Mohan in சமூகம்

கொழும்பில் இருந்து முல்லைத்தீவிற்கு சென்ற பௌத்த தேரர்களின் வாகனம் ஒன்று இன்று பிற்பகல் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று கொழும்பில் இருந்து சென்ற பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு-கொக்குளாய் முகத்துவாரப்பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இன்று உதவிப்பொருட்கள் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து புதுக்குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்குவதற்காக முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியூடாக இன்று பிற்பகல் பயணித்துக்கொண்டிருந்த சமயம் வட்டுவாகல் பகுதியில் எதிரே வந்த சிறுரக வாகனம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தோர் சிறுகாயங்களுடன் அதிஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த விபத்து சம்பவத்திற்கு பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தென்பகுதியில் இருந்து சென்ற பௌத்ததேரர்கள் உள்ளிட்ட குழுவினரால் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.