மட்டக்களப்பில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு நகரின் வீதியோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரம் மேற்கொண்ட விவசாயிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளளது.

தைத்திருநாளை முன்னிட்டு விவசாய பொருட்களை வியாபாரம் செய்தோரின் பொருட்களே இன்று மாநகர சபை உறுப்பினர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்துக்கு இடையூறாக அமையாமல் இருக்கும் வகையில் கல்லடிப் பாலத்தின் இருமருங்கிலும் சிறு வியாபாரிகளுக்கான இடத்தினை மாநகர சபையினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.