மோட்டார் சைக்கில் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயம்

Report Print Sumi in சமூகம்

நாவற்குழி - நுனாவில், வைரவ கோயில் பகுதியில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டமையால் இருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து நுனாவில் வைரவ கோயில் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.