மகிழ்ச்சியின் உச்சத்தில் சீமான்! கயல்விழியுடனான திருமணம் எப்படி சாத்தியப்பட்டது?

Report Print Dias Dias in சமூகம்

ஈழப் போராட்டம் 2009ஆம் ஆண்டு களத்தில் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான போராட்டங்களை தமிழகத்தில் கையில் எடுத்தவர்களில் சீமானும் ஒருவர்.

கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஈழ ஆதரவுப் போராட்டம் முழு மூச்சாக இருந்தது. இளைஞர்கள் மத்தியில் ஈழ உணர்வை விதைப்பதையும், ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளையும் தமிழகம் எங்கும் எடுத்துச் சென்றார்.

ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு தனியே ஒரு கட்சி என்று இல்லாமல் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளிடமும் உண்டு. ஆனாலும், அதனை முழு மூச்சாக கொண்டு சென்றவர்களில் சீமானுக்கும் தனிச்சிறப்பிடம் உண்டு.

பல்வேறு விமர்சனங்கள் சீமான் மீது வைக்கப்பட்டாலும், தான் பயணிக்கும் பாதையில் அவர் உறுதியாக இருக்கின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் புகைப்படங்களை பயன்படுத்துவதில் தமிழகத்தில் பலர் பயந்து ஒதுங்கிய போது, சீமான் தலைவரின் வழியில் பயணிக்கிறேன் என்று தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களோடு தான் சூட்டங்களைத் தொடங்குவார்.

அந்தளவிற்கு ஈழமும், ஈழப் போராட்டமும் அவரின் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி ஈழப் போராட்டம் குறித்து தமிழகத்தில் முழங்கிய சீமானை திருமணம் செய்து கொள்ளுமாறும் அவரின் நலன் விரும்பிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார் சீமான். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் சீமானுக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

சிறு வயது முதலே கயல்விழியின் தந்தைக்கு ஈழம் குறித்துப் பேசியிருக்கிறார். இதனால் தந்தையை பார்த்து மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழப் போராட்டங்களை நடத்தியுள்ளார். இந்த போராட்டங்கள் கயல்விழியை கவர்ந்துள்ளது.

தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை சீமானிடம் கூறிய கயல்விழி, ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி சீமானுக்கு பிடித்து இருந்தது.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த இயக்குநர் மணிவண்ணன், ஐயா பழநெடுமாறன் மற்றும் நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சீமானை வற்புறுத்தி வந்தனர்.

ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த சீமானை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும், சீமானும் சந்திதுள்ளார்கள்.

இதையடுத்து சீமானின் பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஈழ உணர்வினால் இணைந்த சீமான் கயல்விழி தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இத்தருணத்தில் சீமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துவருகின்றார்கள் உணர்வாளர்கள்.