கிளிநொச்சியில் இலஞ்சம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் கைது!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பூனகரிப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கிய உதவிக்கு இலஞ்சம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் உத்தியோகத்தரை இன்று கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவி வழங்க இலஞ்சம் தருமாறு பொருளாதார உத்தியோகத்தர் கேட்டுள்ளார்.

இதற்கு இனங்க பணம் வழங்கப்பட்ட போது குறித்த அரச உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது,

மேற்படி சம்பவம் உண்மையென்றும், குற்றச் சாட்டுத் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அறிக்கையினை அனுப்பி வைப்பதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளார்.