யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது உத்தர தேவி!

Report Print Murali Murali in சமூகம்

பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த உத்தர தேவி என்ற அதிவேக சொகுசு புகையிரதம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.

குறித்த புகையிரதம் இன்று காலை 7.45 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 2.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் எனப் பலரும் இணைந்துகொண்டனர்.

இதேவேளை, குறித்த புகையிரதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.