போதையில் இளைஞர்கள் செய்த அட்டகாசம்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை பகுதியில் உள்ள நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டார்.

திருகோணமலை மகமாயாபுர, பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மதுபானம் அருந்தி விட்டு பழைய பகைமை காரணமாக வீதியால் சென்ற நபரை தேவையற்ற கதைகளை பேசி தடியால் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், தாக்குதலுக்குள்ளான நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.