வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்த பௌத்த மதகுருமார்

Report Print Mohan Mohan in சமூகம்

கொழும்பு - வெள்ளவத்தை இராமகிருஸ்ணா வீதி தொடக்கம் பம்பலப்பிட்டி வரை 50 பௌத்த மதகுருமாரினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் குரே மாவத்தை தர்மசாந்தி விகாரையில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 50 பௌத்த துறவிகளினால் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்கள் முல்லைத்தீவில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு இன்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையினை பாதுகாப்போம் என்ற அமைப்பினால் இந்த ஒழுங்கமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.