வயல் நிலப்பகுதிகளின் இழப்பீடுகள் குறித்து ஆராய அங்கஜன் கண்காணிப்பு விஜயம்

Report Print Vamathevan in சமூகம்

கிளிநொச்சி - வட்டகட்சி D1 கமக்கார அமைப்பு, பன்னங்கண்டி மயிலங்காடு கமக்கார அமைப்புக்களின் விளை நிலப் பரப்புக்களில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்டிருக்கும் இழப்புக்கள் மற்றும் அதற்கான இழப்பீட்டு மதிப்பீடுகள் குறித்து கமக்கார அமைப்புக்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் குறித்த பகுதிகளுக்கு அதிகாரிகளுடன் கள விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்தார்.

விவசாய கமநல காப்புறுதி சபையின் அதிகாரிகளுடனும், மதிப்பீட்டு குழுக்களுடனும் மேற்கொள்ளப்பட்டு வரும் மதிப்பீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு குழுமியிருந்த விவசாயிகளின் ஆதங்கங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியிருந்தார்.

செய்மதி இழப்பீடு, மதிப்பீடு மற்றும் உர பசளை பெற்றவர்களுக்கு மட்டுமான இழப்பீடு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நெல்லின் அறுவடையின் பின்னரான கேள்வி, குறித்த பிரதேசங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இழப்பீடு, என்பதன் காரணமாக விவசாயிகள் தமது ஆதங்கங்களை முன்னாள் விவசாய பிரதி அமைச்சரிடம் தீர்வுகளை பெற்று கொள்ளுமுகமாக தெரியப்படுத்தியிருந்தனமை குறிப்பிடத்தக்கது.