இலங்கையில் பௌத்த பிக்குவாக மாறிய பிரித்தானிய பிரஜை

Report Print Kamel Kamel in சமூகம்

பிரித்தானியாவின் பாடசாலையொன்றில் பிரதி அதிபராக கடமையாற்றிய ரொபர்ட் அக்டின் நேற்றைய தினம் இலங்கையில் பௌத்த துறவற வாழ்க்கையில் பிரவேசித்தார்.

62 வயதான ரொபர்ட் அக்டின், ஓய்வு பெற்ற பாடசாலை பிரதி அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டின், காலி மானவில ஸ்ரீ கெத்தாரம விஹாரையில் பிரித்தானியாவின் தம்மானந்த தேரர் என்ற பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டார்.

பௌத்த மதம் பற்றி புரிந்து கொண்டு முக்தியை அடையும் நோக்கில் அவர் இவ்வாறு துறவறம் பூண்டுள்ளார்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் அமைந்துள்ள பௌத்த விஹாரை ஒன்றுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக சென்று வழிபாடுகளிலும் தியானங்களிலும் ஈடுபட்டு வந்த ரொபர்ட் அக்டின் எனப்படும் தம்மானந்த தேரர், பௌத்த துறவற வாழ்க்கையை தொடரத் தீர்மானித்தார் என அந்த பௌத்த விஹாரையின் விஹாராதிபதி கல்பொத்யாயே பேமானந்த தேரர் தெரிவித்துள்ளார்.