இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு

Report Print Rusath in சமூகம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டாஞ்சேனை கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று இளம் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் உயிரிழந்த ஒரு பிள்ளையின் தாயான செல்லத்தம்பி புஸ்பராணி (வயது 26) என்பவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தைப்பொங்கலுக்கு புத்தாடை உடுத்தி மகிழ வழியேதுமில்லை என்ற கவலையில் உயிரிழந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வருட 2019 ஆங்கிலப் புத்தாண்டுக்கு கடன் அடிப்படையில் புத்தாடைகள் வாங்கியதாகவும் அந்தக் கடன் இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும்போது தைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க வழியில்லாமல் திண்டாடியதாக கணவன் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.