யாழ். சுதந்திரக்கட்சி காரியாலயத்தில் விமர்சையாக நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள்

Report Print Vamathevan in சமூகம்

முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் யாழ். தலைமை காரியாலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பொங்கல் நிகழ்வுகள் இன்று மதியம் யாழ். மாவட்ட இணைப்பாளர் உதய சீலன் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளரும், கலை கலாசார துறை பொறுப்பாளருமான செல்வம் கஜந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் யாழ். காரியாலய இணைப்பாளர் பிரதாப், வலிகாமம் இணைப்பாளர் திருஞான சீலன், வடமராட்சி உடுப்பிட்டி தொகுதியின் இணைப்பாளரும் வல்வெட்டி நகரசபை உறுப்பினருமான செந்தில்வேல், பருத்தித்துறை இணைப்பாளர் செல்வதீசன், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் காயத்திரி மற்றும் செயற்பாட்டாளர்கள் பொங்கல் வைபவ நிகழ்வில் இணைந்து சிறப்பித்திருந்தனர்.